பி.எச்.டி படிப்பு படித்து முடிப்பதற்குள் அந்த மாணவர்களுக்கு எக்கச்சக்கமான இடையூறுகளை சந்திப்பதே போதும் போதும் என ஆகிவிடும். இதனால் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வோர் பெரும் போராட்டத்தையே சந்திப்பதோடு பல நிகழ்வுகளை தாமதப்படுத்தும் எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
இப்படி இருக்கையில், பி.எச்.டி. மாணவர் ஒருவர் தன்னை, “பயங்கரமான ஒத்திப்போடுபவர்” என எழுதி வைத்திருந்த போட்டோதான் தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது.
அந்த போட்டோவில் “தயவு செய்து என்னிடம் யாரும் பேசாதீர்கள். நான் என்னுடைய பி.எச்.டி வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் பேச முற்பட்டால் என்னால் பேசுவதை நிறுத்த முடியாது. ஏனெனில் நான் பயங்கரமான procrastinator. எதாவது கூறவேண்டும் என்றால் இ மெயில் செய்யுங்கள். நன்றி” என எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
இதனை ஸ்டீவ் பிங்கம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “எல்லா பி.எச்.டி. மாணவர்களுக்கும் ஒரு கட்டத்தில் இப்படியான தேவை ஏற்படும் போலிருக்கிறது” என கேப்ஷன் இட்டிருக்கிறார்.
இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் வெகு விரைவாக வைரலாகியிருக்கிறது. அதில் ஒருவர் “மாணவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவரும், குறிப்பாக இன்றைய உலகில். நாம் அனைவரும் நாம் எதிர்கொள்ள வேண்டியவற்றிலிருந்து கவனச்சிதறலைத் தேடுகிறோம்!” என்றுக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, சில பி.எச்.டி. மாணவர்களும் “இதேபோன்று ஒரு காலத்தில் நானும் செய்திருக்கிறேன்” , “என் வாழ்க்கையின் கதை இதுதான்” என்றும் பலர் ட்வீட்டியிருக்கிறார்கள்.
ALSO READ: