அத்தனை கோடி ரூபாய் கொடுத்து கிறிஸ் மோரிஸை ஏலம் எடுத்தது சரியில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் கிறிஸ் மோரிஸ் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. இதற்கு முன்பு சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிறிஸ் மோரிஸ்.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய கெவின் பீட்டர்சன், "எனக்கு தெரிந்து அத்தனை கோடி ரூபாய்க்கு கிறிஸ் மோரிஸ் நியாயமானவர் இல்லை என்றே நினைக்கிறேன். அவர் மீது ஒரு அழுத்தம் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு கூட முதல் சாய்ஸில் கிறிஸ் மோரிஸ் இல்லை. அப்படி இருக்கும்போது அவர் மீது நாம் நிறைய எதிர்பார்க்கிறோம் என நினைக்கிறேன்" என்றார்.
மேலும் "அவர் குறித்து நிறைய பேசிவிட்டோம். அவரிடம் எந்த சிறப்பும் இல்லை. எனக்கு தெரிந்து அவருக்கும் இன்னும் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும். பின்பு மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார். இந்த ஐபிஎல் கிறிஸ் மோரிஸ்க்கு இப்படியாகதான் இருக்கும்" என்றார் கிறிஸ் மோரிஸ்.