“கூட்டணியில் இல்லையென்றாலும் ராகுலை மதிக்கிறேன்” - அகிலேஷ் விளக்கம்

“கூட்டணியில் இல்லையென்றாலும் ராகுலை மதிக்கிறேன்” - அகிலேஷ் விளக்கம்
“கூட்டணியில் இல்லையென்றாலும் ராகுலை மதிக்கிறேன்” - அகிலேஷ் விளக்கம்
Published on

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக போடப்பட்ட தேர்தல் கணக்கில் காங்கிரஸை தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வியூகங்கள் பற்றிய செய்திகள் வரத்தொடங்கிவிட்டன. உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதன்படி அம்மாநிலத்திலுள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தன. 

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்திய பின் அகிலேஷ் அதனை வழிமொழிந்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள ராகுல் மற்றும் சோனியாவின் அமேதி, ரபேலி தொகுதிகளில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மக்களவை தேர்தல் வியூகங்கள் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக போடப்பட்ட தேர்தல் கணக்குகளின் அடிப்படையிலேயே காங்கிரஸை தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு காங்கிரசுடன் சேர்வீர்களா என்று கேட்டத‌ற்கு, தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என அகிலேஷ் தெரிவித்தார்.

மேலும் காங்கிரசுடன் தாங்கள் கூட்டணி வைக்காவிட்டாலும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மீது தான் பெருமதிப்பு வைத்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி மீது மரியாதை வைத்துள்ளதாகவும் கூட்டணி குறித்து அறிவிக்கும் முன் அகிலேஷ் யாதவ் தங்களிடம் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்தது” குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com