என்னை மூடி மறைத்து வளர்த்தார்கள்: அம்ருதா சிறப்பு பேட்டி

என்னை மூடி மறைத்து வளர்த்தார்கள்: அம்ருதா சிறப்பு பேட்டி
என்னை மூடி மறைத்து வளர்த்தார்கள்: அம்ருதா சிறப்பு பேட்டி
Published on

உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் தான் மறைத்து வளர்க்கப்பட்டு வந்ததாக ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதா கூறியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் ஜெயலலிதாவின் மகள்தான் என நிரூபிக்க ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுருத்தியது.

இதனிடையே அம்ருதா, புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல முக்கிய தகவல்களை கூறியுள்ளார். அம்ருதா தனது பேட்டியில், “நான் இங்கு உரிமை கொண்டாட வரவில்லை. ஜெயலலிதா எனது அம்மா என்பது கடந்த மார்ச் மாதம்தான் தெரியவந்தது. உண்மையில் நான் அவரை எனது பெரியம்மா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்னை வளர்த்த ஷைலஜா அம்மா எனக்கு ஜெயலலிதா எனது பெரியம்மா என்று கூறியிருந்தார். ஜெயலலிதா அம்மாவை பல முறை சென்று பார்த்திருக்கிறேன். எங்களுக்கு இடையில் நல்ல உறவு இருந்தது. என்னை கட்டி அணைத்துக் கொள்வார். முத்தமிடுவார். அவர் இல்லாத நிலையில், இப்பொழுதுதான் தெரிகிறது அது தாயின் அரவணைப்பு என்று” என்றார்.

“ஜெ.ஜெ அம்மாவிடன் பேசும் போது, முதலில் இங்கிருந்து சென்றுவிடு, நீ உயிருடன் இருந்தால் போதும் என்று சொல்வார்கள். அவ்வளவு தூரம் மூடி மறைத்து என்னை வளர்த்தார்கள். டி.என்.ஏ. சோதனையுடன் ஸ்ரீவைஷ்ணவ முறைப்படி இறந்தவர்களின் உடல் எரியூட்டப்பட வேண்டும். அதற்காக கோரிக்கை வைத்திருக்கிறேன். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளேன்” என்று அம்ருதா கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com