"தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்"- மதுரையில் மனித சங்கிலி பேரணி

"தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்"- மதுரையில் மனித சங்கிலி பேரணி
"தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்"- மதுரையில் மனித சங்கிலி பேரணி
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மதுரையில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்களிப்பது அவசியம். பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழக காவல்துறையுடன் இணைந்து மாபெரும் மனித சங்கிலி பேரணி நடத்தினர்.

தேர்தலில் வாக்களிப்பது அவசியம், 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்பது ஜனநாயக கடமை, போன்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி இந்த மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. சாலையின் இருபுறங்களிலும் மாணவ, மாணவிகள் நீண்ட தூரம் வரிசையாக நின்று இந்த மனித சங்கிலி பேரணியில் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com