பூந்தமல்லியில் ராட்சத பலூனில் தேர்தல் விழிப்புணர்வு!

பூந்தமல்லியில் ராட்சத பலூனில் தேர்தல் விழிப்புணர்வு!
பூந்தமல்லியில் ராட்சத பலூனில் தேர்தல் விழிப்புணர்வு!
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதை வலியுறுத்தி ராட்சத பலூனில் தேர்தல் விழிப்புணர்வு பூந்தமல்லியில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்களிப்பது தங்கள் கடமை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டையில் நூதன விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்களிப்பது நமது உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவி பறக்க விட்டார். மேலும் இந்த ராட்சத பலூன், தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை பறக்கும். பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களை மடக்கி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

மேலும் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட் ஆகிய பகுதிகளில் உணவுப் பொருள்களை வாங்கி செல்பவர்களுக்கும் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்களுக்கும் அந்த உணவில் வாக்களிப்பது நமது கடமை, தேர்தல் நாள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com