கர்நாடகாவில் ஆட்சிக் கவிழுமா? தொடருமா? - நம்பர் கேம் ஆரம்பம்

கர்நாடகாவில் ஆட்சிக் கவிழுமா? தொடருமா? - நம்பர் கேம் ஆரம்பம்
கர்நாடகாவில் ஆட்சிக் கவிழுமா? தொடருமா? - நம்பர் கேம் ஆரம்பம்
Published on

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் அரசியல் குழப்பங்கள் அநேகமாக தற்போது ஒரு முடிவுக்கு வரவுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

சபாநாயகர் இந்த ராஜினாமா குறித்த முடிவை நாளை அறிவிக்கவுள்ளார். அதேபோல், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ தன்னுடைய ஆதரவை பாஜகவுக்கு தெரிவித்துள்ளார். அதனால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் பலம் குறைந்துள்ளது. ஆகவே, சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நிச்சயம் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆட்சிக் கவிழாமல் இருப்பதை தடுக்க காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியை கொடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. அதில், கர்நாடக நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

தொடக்கத்தில் கர்நாடக சட்டப்பேரவை நிலவரம்:

சட்டப்பேரவையில் மொத்த பலம் : 225 (நியமன எம்.எல்.ஏ உட்பட)
பெரும்பான்மைக்கு தேவை       : 113

தேர்தல் வெற்றிக்குப் பின் ஆளும் கூட்டணி அரசின் பலம்

காங்கிரஸ் : 78
மஜத      : 37
பகுஜன் சமாஜ் : 1
கர்நாடக பிரஜ்ன்யவந்தா ஜனதா : 1
சுயேட்சை : 1
நியமன எம்.எல்.ஏ : 1

ஆக மொத்தம் : 119

பாஜக : 105 

13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்றால்:

காங்கிரஸ்-மஜத கூட்டணி : 105 (14 குறைந்துள்ளது)
பாஜக                    : 105 + 1 சுயேச்சை ஆதரவு

என்ன நடக்கலாம்:

1. ஆட்சி நீடிக்கலாம்:

13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டால், அவையின் பலம் 212 ஆக குறைந்துள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையை நிரூபிக்க 107 ஆக குறையும். ஆனால், காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு 105தான் உள்ளது. அதனால், அதற்குள் அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஆளும் கட்சி சமாதானம் செய்ய வேண்டும்.

அதனால், ராஜினாமா கடிதம் வழங்கியதை திரும்ப பெற்றுக் கொண்டால் ஆட்சி கவிழாமல் இருக்கும். அதற்கான முயற்சியாகதான் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்பட வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் முதலமைச்சரை மாற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

2. பாஜக ஆட்சி அமைக்கும் 

13 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவும். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லையென்றாலும், அதிக இடங்களை கொண்ட கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வாய்ப்புள்ளது. 

3. புதிய தேர்தல்:

நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் தற்போதைய ஆட்சி கவிழும். அப்போது, பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் சட்டப்பேரவையை கலைத்து விட்டு புதிய தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com