உங்களது வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரத்தை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?
https://electoralsearch.in/ என்ற இணைய தளத்தில் உள்நுழைந்தால் உங்களின் பெயர், தந்தை அல்லது கணவன் பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம், தொகுதி போன்ற விபரங்கள் கேட்கப்படுகிறது. இதனை பூர்த்தி செய்தபின் கிளிக் செய்தால், உங்கள் வாக்காளர் தகவல் சீட்டு பதிவிறக்கம் ஆகிறது. இதனை பிரிண்ட் அவுட் எடுத்து வாக்குப்பதிவு கூடத்திற்கு எடுத்து செல்லலாம். அதாவது பூத் சிலீப்பிற்கு பதில் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை வாக்காளர் அடையாள எண் தெரிந்து இருந்தால் இதே இணையதளத்தில் மற்றொரு வசதியும் உள்ளது. அதனை கிளிக் செய்து உங்களின் வாக்காளர் அடையாள எண், மாநில விபரங்களை பதிவு செய்தாலும் வாக்காளர் அடையாள சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.