தரமான இறைச்சியைத் வாங்குவது எப்படி? இதை கவனியுங்க!

தரமான இறைச்சியைத் வாங்குவது எப்படி? இதை கவனியுங்க!
தரமான இறைச்சியைத் வாங்குவது எப்படி? இதை கவனியுங்க!
Published on

இறைச்சி நம் உணவில் ஓர் முக்கிய அங்கம். இதில் புரதம், பி1 முதல் பி12 வரையிலான வைட்டமின்கள், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலை ஆரோக்யமாக வைத்திருக்க இவை அனைத்தும் நமக்குத் தேவை. அதற்கு தரமான இறைச்சியை வாங்குவது அவசியம். இல்லாவிட்டால் அவை உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இறைச்சி வாங்கும்போது சில விஷயங்களை கருத்தில்கொள்ள வேண்டும்.

மேற்புறத்தை ஆராய்ந்து பாருங்கள்

நல்ல இறைச்சியை அதன் மேற்புறத்தை வைத்து கண்டுகொள்ளலாம். சிவப்பு இறைச்சியை வெட்டும்போது தண்ணீராகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ இருக்கக்கூடாது. இந்த நீர் வந்தால் அது புதிய இறைச்சியாக இருக்காது. மேலும் எலும்பிலிருந்து தனியே விழக்கூடாது. கோழி என்றால், அதன் தசை நார்கள் தெரியவேண்டும். மேலும் எலும்புடன் உறுதியாக இருக்கவேண்டும். மேலும் தொடும்போது விரல்களில் ஒட்டக்கூடாது.

நிறத்தை கவனியுங்கள்

இறைச்சியின் நிறத்தை வைத்தே அது புதியதா அல்லது பழையதா என சொல்லமுடியும். உடனக்குடன் வெட்டிய இறைச்சியைப் பார்த்தால் நன்கு சிவப்பாக இருக்கும். அதுவே பேக் செய்யப்பட்ட இறைச்சியைப் பார்த்தால் அதில் பழுப்புநிறம் கலந்திருக்கும். கோழி இறைச்சியாக இருந்தால் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமாக இருக்கவேண்டும். இறக்கையின் அடிப்பகுதியில் பச்சை நிறம் தெரிகிறதா என்பதை கவனிக்க தவறவேண்டாம். மேலும் அதன் உடலில் எந்த காயங்களும், ரத்தக் கட்டிகளும் இருக்கக்கூடாது.

வாசனை எப்படி வருகிறது?

இறைச்சி புதிதா என்பதைக் கண்டறிவதில் மற்றொரு எளிய வழி அதன் வாசனை. எந்த வகையான இறைச்சியை வாங்கினாலும் சரி, அதில் அடர்ந்த வாசனை அல்லது துர்நாற்றம் வந்தால் வாங்கக்கூடாது. புதிதாக வெட்டிய ஆட்டு இறைச்சியில் ஒரு ஆட்டுக்குட்டியின் வாசனை இருக்கவேண்டும். கோழி இறைச்சியைப் பொறுத்தவரை வலுவான நாற்றம் இருக்காது. ஆனால் அதில் சிலநேரம் மாமிச வாசனை வரும். அவை புதிதாக இருக்காது.

தோலில்லாத இறைச்சியை வாங்குங்கள்

இறைச்சி புதிதாக இருப்பதைத் தவிர, வியாதிகள் வராமல் தடுக்க தோல் இல்லாமல் வாங்கவும். சருமத்தில் எப்போதும் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருக்கும். இது இதயத்திற்கு நல்லதல்ல. மேலும் எடையைக் கூட்டும். தோலுடன் கூடிய இறைச்சியை வைத்து வறுத்த உணவுகளைத் தயாரிக்கும்போது அது உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

எளிதில் கண்டறியக்கூடியதை வாங்குங்கள்

நீங்கள் வாங்கும் இறைச்சி எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஒரு விலங்கின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அதன் தரத்தைத் தெரிந்துகொள்வதற்கு உதவும். பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை வாங்கும்போது, இறைச்சியின் தரம் எப்படி இருக்கிறது, எந்த பண்ணையிலிருந்து வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அதன் லேபிளைப் படிக்கவேண்டும். அதைவைத்து சரியான இறைச்சியைத் தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com