விழுப்புரம் : மரக்காணத்தை அடுத்துள்ள பொம்மையார் பாளையம் மீனவ குப்பதில் கடல் சீற்றத்தினால் 75க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள பொம்மையார் பாளையம் மீனவ குப்பம் பகுதியில்; சுமார் 350 வீடுகள் உள்ளன, இந்நிலையில் கடல் அலை சீற்றத்தாலும் தற்போது பெய்து வரும் கனமழையாலும் இந்த மீனவ குப்பத்தில் உள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் பொம்மையார் பாளையம் பகுதியில் தற்போது வரை 78 வீடுகள் கடல் அறிப்பினால் முற்றிலும் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் 253 மீனவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு சார்பில் சுனாமி தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் எந்த குடியிருப்பும் இதுவரை வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.