”நான் போதையிலதான் இருக்கேன்.. பொய் சொல்லல” - போலீசிடம் தானாக ஒப்புக்கொண்ட இளைஞர்

”நான் போதையிலதான் இருக்கேன்.. பொய் சொல்லல” - போலீசிடம் தானாக ஒப்புக்கொண்ட இளைஞர்
”நான் போதையிலதான் இருக்கேன்.. பொய் சொல்லல” - போலீசிடம் தானாக ஒப்புக்கொண்ட இளைஞர்
Published on

மது குடித்தால் உண்மையைத்தான் பேசுவார்கள் என படங்களில், சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். ஆனால் உண்மையிலேயே டிராஃபிக் போலீசிடம் சிக்கிய இளைஞர் ஒருவர்தான் போதையில்தான் இருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவோர் போலீசிடம் சிக்கி அபராதம் கட்டாமல் தப்பிக்க பல பொய்களை அவிழ்த்து விடுவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த அமெரிக்கர் முழு மதுபோதையில் இருந்தபோதும் நேர்மையான தான் மது குடித்திருந்ததை வாக்குமூலமாகவே கொடுத்திருக்கிறார்.

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஜோசஃப் பெக் என்ற 27 வயதான இளைஞர் ஒருவர் நள்ளிரவு 2 மணியளவில் ஓவர் ஸ்பீடில் கார் ஓட்டி வந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்புகளில் மோதி சேதப்படுத்தியிருக்கிறார். இதனையடுத்து ஜோசஃபை பினெல்லாஸ் மாவட்ட போலீசார் மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இடத்தில் ஜோசஃபை 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து ஜோசஃப் பெக்கை போலீசார் அணுகிய போது, “நான் பொய் சொல்லப் போவதில்லை. நான் குடித்திருக்கிறேன்” என ஜோசஃப் தாமாக உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அவரது நிலையை கண்ட போலீசார் எந்த அளவுக்கு அவர் குடித்திருக்கிறார் என சோபர் டெஸ்ட் செய்தபோது 0.272 மற்றும் 0.282 ஆக இருந்ததாகவும், இது சட்ட வரம்பை விட அதிகமாக இருந்ததால் அவரை உடனடியாக கைது செய்து பினெல்லாஸ் கவுண்டி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com