பழைய அரசுப் பள்ளியை புதுப்பிக்க உதவி... ஆஸ்திரேலிய ரஜினி மக்கள் மன்றம் அசத்தல்

பழைய அரசுப் பள்ளியை புதுப்பிக்க உதவி... ஆஸ்திரேலிய ரஜினி மக்கள் மன்றம் அசத்தல்
பழைய அரசுப் பள்ளியை புதுப்பிக்க உதவி... ஆஸ்திரேலிய ரஜினி மக்கள் மன்றம் அசத்தல்
Published on

94 ஆண்டுகள் பழமையான மதுரை அரசுப் பள்ளியை 'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் புதுமையாக்கி ஆஸ்திரேலியாவின் ரஜினி மக்கள் மன்றத்தினர் அசத்தியுள்ளனர். 


மதுரையைச் சேர்ந்த சாம்சன் ஜீவராஜ் என்பவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அவர், அங்கு ரஜினி மக்கள் மன்றம் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தெற்கு ஆஸ்திரேலியா ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக குரூப்பில் இருக்கும் சாம்சங் ஜீவராஜ், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரவிருப்பதால் அவரது அரசியல் பிரவேசம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் அரசுப் பள்ளியை சீரமைக்க முடிவு செய்தார்.


அதன்படி மதுரை மாவட்டத்தின் கிழக்கு கடைக்கோடி பகுதியான வரிச்சூர் கிராமத்தில் 1926ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரசு பாடசாலை, தற்போது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்ற பெயரில் அதே பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியை புதுப்பிக்க முடிவு செய்த ஆஸ்திரேலிய ரஜினி மக்கள் மன்றத்தினர் மதுரை மாவட்ட மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதற்கான பணியில் இறங்கினார்.


பள்ளி கட்டடத்தின் பழமை மாறாமல் 3லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் புதுப்பிக்கும் பணிகள் நிறைவுபெற்று மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மூலமாக பள்ளி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இப்பணியை தொடர்ந்து, டிவி மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஸ்மார்ட் கிளாஸ்க்குத் தேவையான அனைத்து பொருட்களும் பள்ளி திறந்ததும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மதுரையின் கடைக்கோடியில் உள்ள பராமரிக்கப்படாத பள்ளிகளை புதுப்பிக்கவும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com