கண்ணை கட்டியபடி கடும் யோகாசானம்... சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவியர்

கண்ணை கட்டியபடி கடும் யோகாசானம்... சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவியர்
கண்ணை கட்டியபடி கடும் யோகாசானம்... சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவியர்
Published on

மதுரையில் கண்ணை துணியால் கட்டியபடி 200 வகையான கடும் யோகாசனங்கள் செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். 

மதுரை கூடல்நகர் பாத்திமா கல்லூரி வளாகத்தில் 19 மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு 200 வகையான கடினமனை யோகாசனங்களை செய்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுட்டனர். மதுரை கூடல்நகர் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரின் யோகா பயிற்சி மையத்தில் யோகா பயிலும் மாணவர்கள் கண்களில் கருப்புத்துணியை கட்டியபடி யோகாசனங்களை செய்தனர். 

இதில் யோகாவில் மிகக் கடுமையானதாக கூறப்படும் உத்ராசனம், வச்சராசனம், சக்கராசனம், தனுஷாசனம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட யோகாசனங்களை மாணவர்கள் செய்து காட்டினர். இதன்மூலம் யோகாசனத்தில் புதிய சாதனை படைக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர்.

தொடர்ச்சியாக 7வயது முதல் 16 வயது சிறுவர் சிறுமியர் ஒன்னரை மணிநேரம் யோகாசனங்களை செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com