காஷ்மீர் வாக்குச்சாவடியில் குண்டு வீச்சு, மேற்கு வங்கத்தில் வேட்பாளர் மீது தாக்குதல்!
காஷ்மீரில் வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார்.
மக்களவை தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக, 373 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5வது கட்டத் தேர்தல் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று நடை பெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் 5வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 12 தொகுதிகளில் இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தலா 7 தொகுதிகளி்ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகாரில் 5 தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் 4 தொகுதிகளிலும் காஷ்மீரில் இறுதிக்கட்டமாக 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பதற்றம் நிறைந்த தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் 4 கட்டத் தேர்தலிலும் அதிகளவு வன்முறை சம்பவங் கள் நடைபெற்ற மேற்கு வங்கத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் நடைபெற உள்ள இறுதிக் கட்டத் தேர் தலுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(அர்ஜூன் சிங்)
இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் அனந்த நாக் தொகுதியில் உள்ள ரோஹ்மூ வாக்குச் சாவடியில் பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டு களை வீசிவிட்டு தப்பினர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பரேக்போர் மக்களவைத் தொகுதிக்குட்ட மோகன்புரில் பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங் தாக்கப்பட்டார். திரிணாமுல் காங் கிரஸ் கட்சியினர் தாக்கியதில் அவர் காயமடைந்தார். தங்கள் கட்சியினரை வாக்களிக்க விடவில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.