எமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்

எமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்
எமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்
Published on

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எமெர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த போது எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் ஆட்சி நிறைவடைந்துள்ளது. 2016ம் ஆண்டு மே 25ம் தேதி முதல் பினராயி விஜயன் முதலமைச்சராக உள்ளனர். கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவாதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தாலும், இடது ஜனநாயக முன்னணி அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைக்கும் பொருட்டும் ‘பொன்கதிர்’ என்னும் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பினராயி விஜயன் எமெர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த போது பரோல் கேட்டு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடன் தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் இந்தக் கடித்தத்தை எழுதியிருந்தார்.   

இந்திரா  காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 1971ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மிசா சட்டத்தை கொண்டுவந்தார். அந்தச் சட்டத்தை பயன்படுத்தி எமெர்ஜென்சி காலத்தில் எதிர்க்கட்சியினர் நிறைய பேர் கைது செய்யப்பட்டனர். 1976ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி இரவில் ஏராளமான போலீசார் பினராயி விஜயன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது பினராயி விஜயன் கன்னூர் மாவட்டத்தில் உள்ள குதுபரம்பா தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தார். அவருடன் சேர்த்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் 10 பேர் மிசாவில் கைதானார்கள். 

தற்போது முதலமைச்சராக இருக்கும் பினராயி விஜயன் தான் அப்போது, கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு கொடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். ஒரு கொடுங்குற்றவாளியைப் போல் அவரை சிறையில் நடத்தினார்கள். மற்றவர்களைப் போல் அவரும் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளானார். 

அப்போது சட்டசபையில், கேரள உள்துறை அமைச்சரான கருணாகரனுக்கும், இடதுசாரி எம்.எல்.ஏக்களுக்கும் இடையே  கடுமையான வார்த்தை மோதல் நடைபெற்றது. பின்னர் சிறையில் இருந்த விடுதலையான பினராயி விஜயன் சட்டசபையில் தன்னுடைய சிறை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

இந்நிலையில், கன்னூரில் உள்ள சிறைத்துறையில் இடது முன்னணி ஆட்சியின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது, பினராயி விஜயன் சிறையில் இருந்த போது பரோல் கேட்டு அவர் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com