நவீன சாதனங்கள் பலவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமானதாக இருந்தாலும் சமயங்களில் அதனை பயன்படுத்த தெரியாதவர்களை ஆச்சர்யப்பட வைப்பதிலும் தவறுவதில்லை. குறிப்பாக முதியவர்கள் பலரும் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டிருப்பார்கள்.
அப்படியாக சில கேட்ஜெட்களை முதியவர்கள் பயன்படுத்துவது குறித்த வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் பரவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருவது வழக்கம். அந்த வகையில், கூகுள் ஸ்பீக்கரில் முதிய பெண்மணி ஒருவர் பேசும் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு 11 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்க்கும் அளவுக்கு அந்த வீடியோவில் அப்படி என்ன இருந்தது என்பதை காணலாம்:
அந்த பெண்மணியின் பின்னால் இருந்து "Hey Google" என கூறச்சொல்ல, அந்த பாட்டியோ, "Hey Googoo" என வித்தியாசமாகவும் அழகாகவும் கூறுகிறார். அப்போது அந்த கூகுள் அசிஸ்டண்ட் எந்த பதிலும் கூறாததால் மீண்டும் ஆக்ரோஷமாக "Ok Googoo" நாளைய வானிலை எப்படி இருக்கும் என கேட்டார்.
சிறிது இடைவெளிவிட்ட பிறகு அந்த டிவைஸில் இருந்து பேச்சு வந்ததும் திகைத்துப்போன அந்த பாட்டி ஒரு அடி எழுந்து பின்னால் சென்று “நான் பயந்துவிட்டேன்” க்யூட்டாக கூறி மீண்டும் கூகுள் அசிஸ்டண்ட் டிவைஸிடம் சென்று "Ok Google" என்றிருக்கிறார்.
இந்த வீடியோவை ஜெனி என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்ததோடு, “முதல் முறையாக கடவுள் உங்களிடம் பேசினால் இப்படிதான் இருக்கும்” என கேப்ஷன் இட்டிருக்கிறார்.
பாட்டியின் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் "Hey Googoo" என கூறியது ரசிக்கும்படியாக இருந்ததாக கமெண்ட் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ 6 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்யப்பட்டிருக்கிறது.