அணிகள் இணைப்பால் அரசு நிர்வாகம் எதுவும் மாறப்போவதில்லை

அணிகள் இணைப்பால் அரசு நிர்வாகம் எதுவும் மாறப்போவதில்லை
அணிகள் இணைப்பால் அரசு நிர்வாகம் எதுவும் மாறப்போவதில்லை
Published on

அதிமுக அணிகள் இணைப்பால் தமிழக அரசு நிர்வாகத்தில் பெரிதாக மாற்றம் எதுவும் நடக்கப் போவதில்லை என புதிய தலைமுறை இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

வெகுநாட்கள் இழுபறிக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. இணைப்பிற்கு பிறகு ஓபிஎஸ் துணை முதல்வராகவும், நிதி, வீட்டுவசதி, நகர்புற திட்டமிடல் உள்ள இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல் அவரது ஆதரவாளரான மஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அணிகள் இணைப்பிற்கு பிறகு தமிழக அரசு நிர்வாகம் மேம்படுமா என்பது குறித்து மூன்று கேள்விகளை முன்வைத்து கருத்துக்கணிப்பை புதியதலைமுறை இணையதளம் நடத்தியது. அரசு நிர்வாகத்தில் மாற்றம் எதுவும் இருக்காது என அதிகபட்சமாக 43.7 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 33.5 சதவிகிதம் பேர் அரசு நிர்வாகம் மேம்படப்போவதில்லை எனவும், மேம்படும் என 22.8 சதவிகிதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com