“மேகதாதுவை ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி” - தமிழிசை

“மேகதாதுவை ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி” - தமிழிசை
“மேகதாதுவை ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி” - தமிழிசை
Published on

மேகதாது அணைக் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருச்சி மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் “நேரம் இல்லாத காரணத்தால் மற்ற கட்சிகளை அழைக்க முடியவில்லை. கட்சி பேதங்களை மறந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும். ஆர்பாட்டத்திற்கு வர பாஜக விரும்பினால் வரவேற்கிறோம்” என தெரிவித்தார்.

இந்நிலையில் மேகதாது அணைக் கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு நாடகம் எனவும் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம்சாட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com