கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் பறக்கும்படை அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ “தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 15.20 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி நேற்று வரை 4.13 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார். மேலும், கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை வங்கிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.