கோவா தேர்தல் முடிவு: முன்னாள் முதல்வரின் மகன் பின்னடைவு

கோவா தேர்தல் முடிவு: முன்னாள் முதல்வரின் மகன் பின்னடைவு
கோவா தேர்தல் முடிவு: முன்னாள் முதல்வரின் மகன் பின்னடைவு
Published on

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பின்தங்கியுள்ளார்.  

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி, பனாஜி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் கோவா தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் உத்பல் பாரிக்கர், 713 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். பனாஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

இதுகுறித்து உத்பல் பாரிக்கர் கூறுகையில், "சுயேட்சை வேட்பாளராக இது ஒரு நல்ல போராட்டம், மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். போராட்டத்தில் திருப்தி அடைந்தேன். ஆனால் முடிவு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது" என்றார்.

காலை 11 மணி நிலவரப்படி, கோவாவில் பாஜக 18, காங்கிரஸ் 12, ஆம் ஆத்மி 1 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும், கோவா ஃபார்வர்டு கட்சி ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிக்க: பரிதாப நிலையில் பஞ்சாப் காங்கிரஸ்: பின்னடைவை சந்தித்த முக்கிய தலைவர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com