அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகித்த கட்சிப் பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது என்றும், நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுச்செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் டிடிவி தினகரன் அறிவித்த நியமனங்களோ, நீக்கங்களோ செல்லாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு முன்பு இருந்த கட்சிப் பொறுப்புகள் அப்படியே தொடரும் என்றும், மேலும், ஜெயலலிதா நியமித்த கட்சி நிர்வாகிகள் அவரவர் பதவிகளில் நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.