சாதி சான்றிதழ் கேட்டதற்காக தாக்கப்பட்ட மாணவி – விழுப்புரத்தில் சர்ச்சை

சாதி சான்றிதழ் கேட்டதற்காக தாக்கப்பட்ட மாணவி – விழுப்புரத்தில் சர்ச்சை
சாதி சான்றிதழ் கேட்டதற்காக தாக்கப்பட்ட மாணவி – விழுப்புரத்தில் சர்ச்சை
Published on

உயர்கல்விக்காக சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த மாணவியை, மற்றொரு சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் தாக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சலுகைகள் பெறுவதற்காக  சாதி சான்றிதழ் பெற இந்த குடும்பத்தினர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு சமூகத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

தினக்கூலியாக பணியாற்றும் டி.பரங்கிர்ணி கிராமத்தை சேர்ந்த முனியாண்டியின் மூன்றாவது மகள் தனலட்சுமி, இவர் பன்னிரெண்டாம் வகுப்பில் 354 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவர் மருத்துவர் ஆவதற்கான கனவுடனும் உள்ளார். எனவே இதற்காக தேவையான ஆவணங்களுடன் சாதி சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் தனது இரண்டு அக்காக்களும் உயர்படிப்பு படிக்க முடியவில்லை என்றும் சொல்கிறார் தனலெட்சுமி. அதனால் 14 வகையான இணை ஆவணங்களை இணைத்து சாதி சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை விழுப்புரம் வருவாய் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், இந்த கிராமத்திற்கு வந்து தனலட்சுமியின் சாதி சான்றிதழ் குறித்து விசாரித்துள்ளார். அப்போது மற்றொரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனலெட்சுமியின் குடும்பத்தினர்  சலுகைகள் பெறுவதற்காக  சாதி சான்றிதழ் கேட்பதாக கூறியுள்ளனர்.  பின்னர் இந்த விவாதம் கைகலப்பாக மாறி தனலெட்சுமி தாக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி கூறும் கிளியனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி “ இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள், ஏழுமலை, துரைக்கண்ணு, கோபால் ஆகியோருக்கு  இப்போது சி. எஸ். ஆர் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com