அரசியலில் கட்டமைப்பு மிக மிக முக்கியம்: ரஜினி

அரசியலில் கட்டமைப்பு மிக மிக முக்கியம்: ரஜினி
அரசியலில் கட்டமைப்பு மிக மிக முக்கியம்: ரஜினி
Published on

கமல்ஹாசன் அண்மையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்தித்தார்.

சென்னையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது திடீரென தோன்றிய ரஜினி ரசிகர்களிடம் பேசியது: "அரசியல் கட்சித் தொடங்குவதற்கு கட்டமைப்பு மிக மிக முக்கியம். அதனை சரியாக செய்ய வேண்டும். மிகப்பெரிய கட்சிகள் அதனால்தான் வெற்றிப்பெற்றன. இது சாதாரண பில்டிங் கிடையாது , 32 ப்ளோர் அதாவது 32 மாவட்டம். அதனால் ஃபவுண்டேஷன் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கனும். ஒரு குடும்பம் நடத்த, குடும்பத் தலைவன் சரியா இருக்கனும், நான் அப்படி இருக்கேன். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் வேலையை அமைதியாக செய்வோம். அரசியலில் எந்த விஷயத்தையும் கவனமாக கையாள்வது அவசியம். எனது ரசிகர்களான உங்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தர தேவையில்லை, நீங்கள் மற்றவர்களுக்கு கற்றுத் தறுவீர்கள். அனைத்து ரசிகர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க சில நாட்கள் ஆகும் " என்று தெரிவித்தார் ரஜினி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com