இயற்கையை விரும்பும் கேரள மக்கள் உடலுக்கும், சுவைக்கும் இனிதான உணவையே விரும்புவதால், இன்று தலைவாழை இலையிட்டு, வகைவகையான பாயசங்கள் பொரியல் வகைகள், ஊறுகாய்கள், கூட்டு, எரிசேரி, ரசம், சாம்பார், பழங்கள் என 64 வகையான பலவகை பதார்த்தங்களை செய்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்
இது அரிசிமாவை இலையில் தட்டி வேகவைத்து, வெல்லம், தேங்காய்பால்ம் முந்திரி, ஏலக்காய், நெய் சேர்த்து செய்யும் ஒரு சுவையான பாயசம்
பலா பழத்தை வேக வைத்து, வெல்லம், நெய், முந்திரிபருப்பு சேர்ந்துச் செய்யப்படும் ஒருவகை பாயசம் ஆகும்,
வறுத்த சேமியா, பால், சக்கரை, முந்திரி, ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் சுவையான பாயசமாகும்
அரிசி தேங்காயை அரைத்துக்கொண்டு, வேகவைத்து அத்துடன் வெல்லம், ஏலக்காய் முந்திரி சேர்ந்து செய்யப்படும் சுவையான பாயசம் ஆகும்
வெள்ளரிக்காய், தயிர், கடுகு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்யப்படும் ஒருவித பச்சடி.
நேந்தரம்பழத்தில் செய்யப்படும் சிப்ஸ்
மாங்காயை நறுக்கி, உப்பு, காரம், தூவி, கடுகு தாளித்து வைக்கப்படும். ருசியான சுவையான ஊறுகாய் இது.
எல்ய்மிச்சை பழத்தி ஊறவைத்து உப்பு, காரம் சேர்த்து தாளித்து செய்யப்படும் ஊறுகாய் இது.
இஞ்சி எடுத்து, தோல்நீக்கி, உப்பு, காரம் சேர்த்து அரைத்து கடாயிலிட்டு எண்ணெய் ஊற்றி வதக்கப்படும் ஊறுகாய் இது. உடலுக்கு மிகவும் நல்லது.
பாவற்காய், வதக்கி, தயிர், உப்பு, சேர்த்து மிளகாய் தாளித்து செய்யப்படும் ஒருவித பச்சடி. உடலுக்கு மிகவும் உகந்தது.
பீட்ரூட் தோல் சீவி வேகவைத்து உப்பு, தயிர் சேர்ந்து செய்யப்படும் ஒருவித பச்சடி. பார்ப்பதற்கு கலராக இருந்தாலும் உடலுக்கு உகந்தது
பல காய்கறிகளை வேகவைத்து தேங்காய் மிளகாய் அரைத்து, தயிர் கலந்து செய்யப்படும் அவியல் ஒன்று இருந்தால் போதும் இலை காலியாவது உறுதி. மிகவும் சுவையானது.
காய்கறிகளை வேகவைத்து தேங்காய் பருப்பு சேர்த்து செய்யப்படும் கூட்டு. உடலுக்கு நல்லது.
இது அப்பளத்தை ஒத்த ஒன்று தான் என்றாலும் இதன் சுவை வேறு. எண்ணெயில் போட்டதும் ஊரே மணக்கும்.