கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்குறது இதுதானா? ஃப்ளிப்கார்ட்டால் கஸ்டமருக்கு அடித்த ஜாக்பாட்!

கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்குறது இதுதானா? ஃப்ளிப்கார்ட்டால் கஸ்டமருக்கு அடித்த ஜாக்பாட்!
கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்குறது இதுதானா? ஃப்ளிப்கார்ட்டால் கஸ்டமருக்கு அடித்த ஜாக்பாட்!
Published on

இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் பொருட்கள் பெரும்பாலும் மாறி வருவதும், தரமற்ற பொருட்களாக வருவதுமான குற்றச்சாட்டுகள்தான் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதுவும் பண்டிகைகால தள்ளுபடி என்றால் கேட்கவே வேண்டாம். பல்வேறு குளறுபடிகளுக்கு எளிதாகவே இடமளிக்கப்பட்டுவிடும்.

இப்படி இருக்கையில், நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் அதை விட விலை உயர்ந்த பொருள் டெலிவரி செய்யப்பட்டால் அதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என கருதலாம். ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளருக்கு கூறையை பிய்த்துக்கொண்டு அந்த நல்வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

அதன்படி, அஷ்வின் ஹெக்டே என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் தன்னுடைய பக்கத்தில் “என் ஃபாலோவர்ஸ்களில் ஒருவருக்கு ஃப்ளிப்கார்டில் தான் ஆர்டர் செய்த ஐஃபோன் 13க்கு பதில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐஃபோன் 14 டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு அதற்கான போட்டோக்களையும் பகிர்ந்திருக்கிறார்.

இந்த ட்வீட் பகிர்ந்த சில நேரங்களிலேயே எண்ணற்ற நெட்டிசன்ஸ்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு பயனர் “மக்கள் தொடர்ந்து ஃப்ளிப்கார்ட்டை குறை கூறி வரும் நிலையில், இப்படிப்பட்ட இரக்கமுள்ள நிறுவனமாக அல்லவா இருக்கிறது” என பூரித்துப்போய் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல, “ஐஃபோன் 13க்கு பதில் ஐஃபோன் 14 பெற்றவர் அதிர்ஷ்டகாரர்தான். இதுபோன்று தவறுகளை செய்துவிட்டு மற்ற வாடிக்கையாளர்களுக்கு தரமற்ற அல்லது மலிவான பொருட்களை ஃப்ளிப்கார்ட் மாற்றி அனுப்பி விடுகிறது” எனவும் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, “இது ஒரு நல்ல தவறாக இருக்கிறதே” என்றும், “இது போன்ற அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்க வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com