தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு முதல்கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தல் நிறைவுபெற்றுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என மொத்தம் 45ஆயிரத்து 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குச்சீட்டுகளில் குழப்பம் உள்ளதாக புகார்கள் எழுந்ததால் சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே சில பகுதிகளில் அதிகாரிகளுடன் வேட்பாளர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மாலை 3 மணி நேர நிலவரப்படை 57.50 % வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு முதல்கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றுள்ளது. வரும் 30 ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.