தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரானார் அசாருதீன்

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரானார் அசாருதீன்
தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரானார் அசாருதீன்
Published on

தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் தலைமையிலான அரசு முன் கூட்டியே கலைக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா மாநிலத்திற்கும் 5 மாநிலங்களோடு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 7ம் தேதி தேர்தலும், டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. 

தெலுங்கானாவில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஆளும் தெலுங்கானா ரஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவைகளை இணைத்து மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் தெலுங்கானாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக முகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக வினோத் குமார் மற்றும் ஜஃபெர் ஜேவித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த முடிவினை எடுத்துள்ளது.

முன்னதாக 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மோரதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 2014 தேர்தலில் ராஜஸ்தானின் டோங்க் சவய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்தத் தோல்விக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக அசாருதீன் கருதி வந்தார். இந்நிலையில், தெலுங்கானா காரிய கமிட்டி செயல் தலைவராக அவரை காங்கிரஸ் நியமித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com