அலுவலகங்களில் hr, மேனேஜர், டீம் லீடர் போன்றவர்களுடன் அவர்களது பணியாளர்கள் மேற்கொள்ளும் உரையாடல்கள், வேடிக்கையான நடக்கும் நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி மீம்ஸ்களாகவும் பரவுவது வாடிக்கை.
அந்த வகையில், ஊழியர் ஒருவர் தான் வேலையை விட்டுச் செல்வதை அறிவிப்பதற்காக கொடுத்துள்ள ராஜினாமா கடிதம்தான் தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
அந்த வைரல் ராஜினாமா கடிதத்தில் டியர் சார் எனக் குறிப்பிட்டு அதன் சுருக்கத்தில் ராஜினாமா கடிதம் என போட்டு வெறும் bye bye சார் என குறிப்பிட்டிருக்கிறார் அந்த ஊழியர்.
தற்போது வைரலான ராஜினாமா கடிதத்தை பார்த்த நெட்டிசன்கள் தனக்கு வந்த, தனது ஊழியர்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதில், சுருக்கமாக இனிமையாக கூறிவிட்டார் என ஒரு பயனர் குறிப்பிட, சிலர் அந்த கமெண்ட் செக்ஷனில் வித்தியாசமான ராஜினாமா கடித குறிப்புகளை பகிர்ந்திருக்கிறார்கள்.
அதுபோல, வாட்ஸ் அப்பில் குட் மார்னிங் கூறிவிட்டு விலகுவதாக மெசேஜ் வந்ததாக ஒருவர், இது போன்ற உத்தியை ராணுவத்தில் பயன்படுத்துங்கள் என ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதிரி ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் அந்த ராஜினாமா கடிதம் வைரலாகியிருக்கிறது. Resignation letter என ட்விட்டர் தேடுபொறியில் தேடினால் மேற்குறிப்பிட்ட ராஜினாமா கடித போஸ்ட்தான் கொட்டிக் கிடக்கின்றன.
அவற்றில் சில இங்கே இணைக்கப்பட்டிருக்கின்றன: