மத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்

மத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் - அதிர்ச்சி சம்பவம்
மத்திய அமைச்சருக்கே ஈவ் டீசிங் தொல்லை கொடுத்த இளைஞர்கள் -  அதிர்ச்சி சம்பவம்
Published on

மத்திய அமைச்சர் அனுப்ரியா ஈவ் டீசிங் சம்பவத்திற்கு ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சரான அனுப்ரியா உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். தன்னுடைய மிர்ஸாபூர் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து வாரணாசிக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது, அமைச்சரின் காரை மற்றொரு காரில் வந்தவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். அந்த காரில் 3 பேர் இருந்துள்ளனர். அந்த காரில் நெம்பர் பிளேட்டும் இல்லை. 

பின் தொடர்ந்தவர்களை அமைச்சரின் பாதுகாப்பு காவலர்கள் எச்சரித்து உள்ளனர். ஆனால், அதனை எல்லாம் அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. பாதுகாப்பு காவலர்களிடமும், அனுப்ரியாவிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர். எதுவும் செய்ய முடியாத நிலையில், வாரணாசி போலீசிடம் அமைச்சர் அனுப்ரியா புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் தேடுதல் நடத்தி அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் புகார் அளிக்க அமைச்சர் அனுப்ரியா திட்டமிட்டுள்ளார்.

உத்திரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்கையில் பெண்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதற்காக ரோமியோ எதிர்ப்பு அமைப்புகளை அமைத்தார். ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் பெண்களின் பாதுகாப்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. 

இதேபோல், 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானிக்கு இதே போன்று சம்பவம் நிகழ்ந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் அவரது காரை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com