ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம்: பொதுக்குழு தீர்மானம்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம்: பொதுக்குழு தீர்மானம்
ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம்: பொதுக்குழு தீர்மானம்
Published on

ஜெயலலிதாவுக்குப் பின் இனி பொதுச்செயலாளர் பொறுப்பு கிடையாது என்றும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும், ஒருவரை கட்சியில் சேர்க்கவோ, நீக்கவோ ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அதிகாரமளித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் ஆகியோர் செயல்படுவார்கள் என்றும், பொதுச்செயலாளருக்கான அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்-க்கு உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி விதி எண் 19 முதல் 40 வரை திருத்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கியமாக, பொதுச்செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தினகரன் நியமனம் செல்லாது என்பதால் அவரால் அறிவிக்கப்பட்ட நியமனங்களும் செல்லாது என்றும், ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான வழிகாட்டும் குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com