”12 வருஷம் ஆச்சு இன்னும் மனசுலயே இருக்கு” - உயிரை காத்த டாக்டரை அடையாளம் கண்ட யானை!

”12 வருஷம் ஆச்சு இன்னும் மனசுலயே இருக்கு” - உயிரை காத்த டாக்டரை அடையாளம் கண்ட யானை!

”12 வருஷம் ஆச்சு இன்னும் மனசுலயே இருக்கு” - உயிரை காத்த டாக்டரை அடையாளம் கண்ட யானை!
Published on

செல்லப்பிராணிகளின் குறும்புத் தனங்கள் நிறைந்த பல வீடியோக்கள், ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை குதூகலப்படுத்துவது வழக்கமாக இருந்தாலும் சில பிராணிகளின் செயல்கள் பலரது இதயத்தையும் நெகிழவைக்கும் வகையிலேயே இருக்கும். அப்படியான நிகழ்வு குறித்த ஃபோட்டோவைதான் இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், 12 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவரை காட்டு யானை ஒன்று அடையாளம் கண்டுகொண்டதை விவரிக்கும் விதமான இதயம் கனிந்த அந்த தருணத்தின் ஃபோட்டோவையே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்துப் போயிருக்கிறார்கள்.

வாழ்வாதாரத்துக்காக ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்கு செய்த உதவியை மறந்தோ அல்லது அதனைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும் இதேவேளையில் ரத்தமும் சதையுமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது தக்க சமயத்தில் உரிய சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவரை சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் நினைவில் வைத்திருந்த யானை ஒன்று அதனை நினைவூட்டும் விதமாக நடந்துக் கொண்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

அந்த பதிவில், “யானைகள் வலுவான ஞாபக சக்தியை கொண்டிருக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு முன்பு இறக்கும் நிலையில் இருந்தபோது தனது உயிரை காப்பாற்றிய கால்நடை மருத்துவரை அடையாளம் கண்டிருக்கிறது இந்த யானை” என வனத்துறை அதிகாரி பதிவிட்டிருக்கிறார். இதைக் கண்ட நெட்டிசன்கள், “விலங்குகள்தான் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அதில் சந்தேகமேயில்லை” என்றும், “உறவுகளின் மதிப்பை விலங்குகள்தான் சரியாக புரிந்துகொள்கின்றனர்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com