39 வயதான போரி என்ற யானை ஜெர்மனியின் ஹாலே மவுண்டெய்ன் மிருககாட்சி சாலைக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அப்போது அந்த யானைக்கு ஒரு பெண் குட்டி இருந்துள்ளது. மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டுவரப்பட்டதால் தாயும் மகளும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர். இப்போது அந்த மகள் யானைக்கு ஒரு குட்டி உள்ளது. போரி 19 வயதான தனது மகளையும், பேத்திகளான 4 வயது டமிகா மற்றும் 1 வயது எலானியையும் சந்தித்த தருணம் நெட்டிசன்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யானைகளின் சமூகத்தைப் பொறுத்தவரை, பெண் யானைகள் தங்கள் தாய்மார்களுடன்தான் வாழ்நாள் முழுவதும் வாழும். மேலும் அவை ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்ளும். சமீபத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தாயும் மகளும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு யானைகளும் தங்களது தும்பிக்கையால் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ளும் அந்த புகைப்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது.
மிருகக்காட்சி சாலை அந்த புகைப்படத்தை வெளியிட்ட பிறகு, போரியும் அவரது மகளும் மீண்டும் பழகுவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது.