தேர்தல் நடத்தை விதிமுறை - காரில் இருந்து தேசியக்கொடியை அகற்றிய முதல்வர்

தேர்தல் நடத்தை விதிமுறை - காரில் இருந்து தேசியக்கொடியை அகற்றிய முதல்வர்
தேர்தல் நடத்தை விதிமுறை - காரில் இருந்து தேசியக்கொடியை அகற்றிய முதல்வர்
Published on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தமது காரில் இருந்த தேசிய கொடி மற்றும் தமிழ்நாடு அரசின் இலட்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகற்றியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர்கள் தங்கள் அரசு கார்களை தவிர்த்துவிட்டு, சொந்த காரில் பயணித்து வருகிறார்கள். எம்.எல்.ஏ-க்களின் அலுவலகங்களும் பூட்டப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமது காரில் இருந்த தேசியக் கொடி மற்றும் தமிழ்நாடு அரசின் இலட்சினையை அகற்றிவிட்டு, அண்ணா அறிவாலயம் சென்றார்.

இதனிடையே சஃபாரி உடை அணிந்த பாதுகாப்பு படை வீரர்களுடன் கருப்பு நிற உடை அணிந்த சிறப்பு பயிற்சி பெற்ற பாதுகாப்பு படை வீரர்களும் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இணைந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக, தாங்கள் யாரை கண்காணிக்கிறோம் என்பது வெளியே தெரியாமல் இருக்க கருப்பு நிற கண்ணாடி அணிந்தவாறும், ஏ.கே.95 ரக துப்பாக்கியுடனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com