முதன்முறையாக, வாக்குப் பதிவைக் கண்காணிக்க ஆளில்லா விமானம்!

முதன்முறையாக, வாக்குப் பதிவைக் கண்காணிக்க ஆளில்லா விமானம்!

முதன்முறையாக, வாக்குப் பதிவைக் கண்காணிக்க ஆளில்லா விமானம்!
Published on

பிரச்னைக்குரிய பகுதிகளில் வாக்குப்பதிவைக் கண்காணிக்க, ஆளில்லா விமானங்களை தேர்தல் ஆணையம் முதன்முறையாகப் பயன்படுத்தி உள்ளது. 

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதோடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, முதன்முறையாக ஆளில்லா விமானம் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம்புத் நகர் மக்களவைத் தொகுதி பதட்டமான தொகுதி என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய தேர்தல் களின் போது நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்த தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

’’இந்த தொகுதியில் 163 பூத்துகள் பதற்றமானவை. அதனால் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ளது. அதோடு முதன்முறையாக, இந்தப் பகுதி களில் வாக்குப் பதிவைக் கண்காணிக்க 13 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று மாவட்ட மாஜிஸ்திரேட் பி.என்.சிங் தெரிவித்துள்ளார்.

அதோடு, ‘வாக்காளர்கள் பயமின்றி வந்து வாக்களிக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்ற அவர், அதிகளவு வாக்குப்பதிவு இங்கு நடைபெறலாம் எனவும் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com