மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது கண்டெய்னர் லாரியில் நகைகள் அடங்கிய 6 பெட்டிகள் பறிமுதல் செய்தனர். இந்த பெட்டியில் சிக்கிய நகைகள் தங்க நகைகளா? கவரிங் நகைகளா? என்பதை ஆய்விற்கு உட்படுத்தி இருந்தனர், தேர்தல் பறக்கும் படையினர்.
மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே தஞ்சையிலிருந்து சாத்தூர் நோக்கி சென்ற தனியார் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் நடத்தினர். சோதனையின் போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சிக்கிய கண்டெய்னர் லாரியில் நகைகள் அடங்கிய பெட்டிகளை நகைமதிப்பீட்டாளர்கள் மூலம் ஆய்வு செய்தனர். விசாரணையில், அந்த பெட்டிகளில் மோதிரம், வளையல், செயின் மற்றும் கடையின் பழைய பொருட்கள் இருந்தன.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மதுரை ஆட்சியர் நடராஜன் ஆய்வு செய்ததில் கவரிங் நகைகள் என உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் கண்டெய்னர் லாரியில் நகைகள் அடங்கிய பெட்டிகளால் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.