யோகி ஆதித்யநாத், மாயாவதி பரப்புரைக்குத் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி

யோகி ஆதித்யநாத், மாயாவதி பரப்புரைக்குத் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி
யோகி ஆதித்யநாத், மாயாவதி பரப்புரைக்குத் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி
Published on

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மதரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரிப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி ஆகிய இருவரும் மத ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன. 

இதையடுத்து யோகி ஆதித்யநாத்திற்கும் மாயாவதிக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாளை காலை 6 முதல் 72 மணி நேரத்திற்கு உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதேபோல், ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த நேரத்தில் அவர்கள் நேரடியாகவோ தொலைக்காட்சியிலோ பேட்டி அளிப்பது, வேறு ஏதாவது முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுவரை எச்சரிக்கை மட்டுமே விடுத்துவந்த நிலையில் தற்போது இரண்டு பேருக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com