மன அழுத்தத்தால் இளநரை வருமா?

மன அழுத்தத்தால் இளநரை வருமா?
மன அழுத்தத்தால் இளநரை வருமா?
Published on

தவறான உணவுப்பழக்கங்கள் 

தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.

வைட்டமின் பி12 குறைபாடு

குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. இதனால் உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருத்தல்

தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்குத்தான் தைராய்டுப் பிரச்னைகள் அதிகம். எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்து, இதற்கான மருத்துவத்தை உரிய நேரத்தில் மேற்கொண்டால், இளநரை மாறி முடி மீண்டும் கருமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம்.

நீண்டகாலமாகப் புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டுமல்ல, நமது தலைமுடிக்கும் கேடு என்பது தெரியுமா? இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு நீண்டகாலமாகப் புகைப்பிடித்தலும் ஒரு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தலைமுடி பராமரிப்புப் பொருட்கள்

வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.

மன அழுத்தம்

எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே ரிலாக்ஸான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுங்கள்.

பரம்பரை

இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம். இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது. இளநரைக்கு என்ன என்னவெல்லாம் காரணம் என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே இக்காரணிகளைத் தவிர்க்க முயலுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com