ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதிமுகவில் இருக்க முடியாது: ஓம்சக்தி சேகர்

ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதிமுகவில் இருக்க முடியாது: ஓம்சக்தி சேகர்
ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதிமுகவில் இருக்க முடியாது: ஓம்சக்தி சேகர்
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதிமுகவில் இருக்க இயலாது என்று புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், “எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து இந்த கழகத்தை சிறப்பாக செயல்படுத்த விரும்புகிறார்கள். ஆகவே இவர்களுடைய தலைமையை ஏற்று நடப்பவர்கள்தான் அதிமுகவாக இருக்க முடியுமே தவிர, அவர்களை ஏற்றுக்கொள்ளாத யாரும் இந்த கழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறோம்” என்று கூறினார்.

மேலும், “ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தராசின் இரண்டு தட்டுகளைப் போன்றவர்கள். அவர்கள் சமமாக இருப்பதற்கு நாங்கள் நடுவில் தராசு முள்ளாக இருந்து பணியாற்றுவோம்” என்றும் ஓம்சக்தி சேகர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com