பான் மசாலா, குட்கா விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. குட்கா விற்பனையை அனுமதிக்க அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக வெளியான புகாரை எதிர்க்கட்சிகள் பேரவையில் எழுப்பினர். இதைதொடர்ந்து அவையில் தடையை மீறி குட்கா விற்க ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றச்சாட்டினர். மேலும் லஞ்ச புகாரில் சுகாதார அமைச்சர், அதிகாரிகள் பெயரும் சிக்கியுள்ளது என அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து பான் மசாலா, குட்கா விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் திமுகவினர் அமளியில் ஈடுப்பட்டு வெளிநடப்பு செய்தனர். குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.