திமுக பொருளாளர் பொறுப்புக்கு போட்டியா? - ஆ.ராசா, கனிமொழி கூறுவது என்ன?

திமுக பொருளாளர் பொறுப்புக்கு போட்டியா? - ஆ.ராசா, கனிமொழி கூறுவது என்ன?
திமுக பொருளாளர் பொறுப்புக்கு போட்டியா? - ஆ.ராசா, கனிமொழி கூறுவது என்ன?
Published on

திமுக  பொருளாளர் பொறுப்புக்கு தான் விண்ணப்பம் வாங்கப்போவதுமில்லை போட்டியிடப்போவதுமில்லை என ஆ.ராசா, புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதனை தொடர்ந்து பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இரு பதவிகளும் காலியானதால் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும் எனவும் வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக டி ஆர் பாலு மனு வாங்க வர உள்ளதாகவும், இதனால் திமுகவின் பொருளாளர் பாலு என்பது உறுதியாகிவிட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், பொருளாளர் பொறுப்புக்கு தான் விண்ணப்பம் வாங்கப்போவதுமில்லை போட்டியிடப்போவதுமில்லை ஆ.ராசா புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும், திமுக பொருளாளர் பொறுப்புக்கு தான் போட்டியிடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com