திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு மா.கம்யூ., ஆதரவு

திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு மா.கம்யூ., ஆதரவு
திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு மா.கம்யூ., ஆதரவு
Published on

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் தமிழக செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். நீட்தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் குட்கா விவகாரத்தில் உரிய ஆவணங்கள் மறைக்கப்பட்டிருப்பதால், நேர்மையான விசாரணை தேவை என்றும் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதேபோல் திமுக-வின் மனிதச்சங்கிலி போராட்‌டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின்‌ தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். வரும் 27-ம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக-வினரோடு இணைந்து மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மனிதச்சங்கிலியாக நிற்க வேண்டும் என அக்கட்சி தொண்டர்களை ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி வரும் 27-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்போவதாகவும், அதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக அழைப்பு விடுத்திருந்தது. இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என அதன் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com