ஓபிஎஸ்சை பதவிநீக்கம் செய்யகோரி திமுக வழக்கு: உங்களின் கருத்து என்ன? #PTsurvey

ஓபிஎஸ்சை பதவிநீக்கம் செய்யகோரி திமுக வழக்கு: உங்களின் கருத்து என்ன? #PTsurvey
ஓபிஎஸ்சை பதவிநீக்கம் செய்யகோரி திமுக வழக்கு: உங்களின் கருத்து என்ன? #PTsurvey
Published on

முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக்கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அமளியில் ஈடுபட்ட காரணத்தால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். பன்னீர்செல்வம் அணி மட்டும் பேரவைக்குள் இருக்க, வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் பழனிசாமி வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக, பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.

இதுதொடர்பாக, தற்போது திமுக கொறடா சக்கரபாணி சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை  கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Poll loading...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com