பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அக்டோபர் 20-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட திமுகவின் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அக்டோபர் 20-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தன் அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் குறித்தும், ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என அன்பழகன் கூறியுள்ளார். காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.