கடந்த பத்து ஆண்டுகளில் அரசாங்கத்தின் பணம், பொதுமக்களின் பணம் சூறையாடப்பட்டிருக்கிறது. அது தொடர்பான குற்றவாளிகளை தண்டிப்பது பழிவாங்கும் நடவடிக்கை ஆகாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு காணொலி வாயிலாக பதிலளித்தார். இந்த நிகழ்வில் புதிய தலைமுறையின் செய்தியாளர் ரமேஷ் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளித்திருக்கிறார்.
கேள்வி : தமிழக ஆளுநரை நீங்கள் இரண்டுமுறை சந்தித்து, தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பல பக்கங்கள் கொண்ட அறிக்கையை கொடுத்தீர்கள். திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்த விசாரணை எப்படி நடக்கும்? ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் பல திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்கு தொடுத்தார்கள், அதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்குமா?
மு.க.ஸ்டாலின் பதில் : இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, கடந்த பத்து ஆண்டுகளில் அரசாங்கத்தின் பணம், பொதுமக்களின் பணம் சூறையாடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், குற்றவாளிகளை தண்டிப்பது பழிவாங்கும் நடவடிக்கை ஆகாது.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpttvonline%2Fvideos%2F203278157853070%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>