கோவையில் பேரூராட்சியை தேர்தலுக்கு முன்பே கைப்பற்றிய திமுக: சாத்தியமானது எப்படி?

கோவையில் பேரூராட்சியை தேர்தலுக்கு முன்பே கைப்பற்றிய திமுக: சாத்தியமானது எப்படி?
கோவையில் பேரூராட்சியை தேர்தலுக்கு முன்பே கைப்பற்றிய திமுக: சாத்தியமானது எப்படி?
Published on

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பெரிய நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

பெரிய நெகமம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடுவதற்காக பலர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 9 வார்டுகளில் பலர் மனுக்களை திரும்பப்பெற்றதால், தலா ஒருவர் மட்டுமே போட்டியில் இருந்தனர். இதனால், அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதில் 8 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெரியநெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது. பேரூராட்சியை திமுக கைப்பற்றியதால் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். 

இதேபோல, திருப்பூர் மாவட்டம், சின்னக்கம்பாளையம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 13 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் 5 பேர் திமுகவையும், 5 பேர் அதிமுகவையும் சேர்ந்தவர்கள். 7 மற்றும் 12-வது வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. 13 பேர் போட்டியின்றி தேர்வானது, முதல்முறையாக வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com