திருவாரூர் தேர்தல் - திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு

திருவாரூர் தேர்தல் - திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு
திருவாரூர் தேர்தல் - திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு
Published on

திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. முதல் அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. அமமுக சார்பில் அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் திருவாரூர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று மாலை தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், உதயநிதி, பூண்டி கலைவாணன் போட்டியிட 15 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூரில் போட்டியிட தனித் தனியாக 9 பேர் விருப்ப மனு அளித்தனர். 

இதனால், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவானனை அக்கட்சி அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக அவர் இருந்து வருகிறார். 2007இல் திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்த பூண்டி கலைச் செல்வத்தின் சகோதரர் தான் கலைவாணன்.

மு.கருணாநிதியின் இடத்தை நிரப்பும் தொகுதியாக திருவாரூர் இருப்பதால் திமுக வேட்பாளர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com