சிங்கிள் பேரண்ட் சத்யராஜ்: திவ்யாவின் இன்ஸ்டா பதிவு; அம்மாவை குறித்து அவர் கூறியது என்ன?

இது அனைத்து சிங்கிள் பேரண்ட்ஸுக்கான வாழ்த்துப்பதிவு. கடந்த 4 ஆண்டுகளாக என்னுடய அம்மா கோமா ஸ்டேஜில் படுத்தப்படுக்கையாக இருக்கிறார். வீட்டில் வைத்து அவரை கவனித்து வருகிறோம். PEG Tube மூலமாக அவருக்கு உணவு வழங்கப்படுகிறது.
சத்தியராஜ் தனது மனைவியுடன்
சத்தியராஜ் தனது மனைவியுடன்புதியதலைமுறை
Published on

சமீபத்தில் சத்யராஜின் மகள் திவ்யா சத்தியராஜ் தனது இண்ஸ்ட்ரா பக்கத்தில், ”இது அனைத்து சிங்கிள் பேரண்ட்ஸ்க்கான வாழ்த்துப்பதிவு. கடந்த 4 ஆண்டுகளாக என்னுடய அம்மா கோமா ஸ்டேஜில் படுத்தப்படுக்கையாக இருக்கிறார். வீட்டில் வைத்து அவரை கவனித்து வருகிறோம். PEG Tube மூலமாக அவருக்கு உணவு வழங்கப்படுகிறது. அவருக்கு இந்த நிலை ஏற்பட்டபோது குடும்பமே உடைந்துபோனோம். ஆனால், விரைவில் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். இதனால், அப்பா ஒரு சிங்கிள் பேரண்ட்டாக 4 ஆண்டுகளாக எங்களை கவனித்து வருகிறார். அப்பாவின் தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், தந்தையும் நானும் ஒருவருக்கு ஒருவர் தாயாக இருந்து வருகிறோம். என் தந்தை பெரியார்’ என்று பதிவிட்டு இருப்பார்.

இது குறித்தும் அவரது அம்மாவின் உடல்நிலை குறித்தும் அவரிடம் நாம் பேசினோம். அது குறித்த பதிவு இதோ...

அம்மாவுக்கு என்ன ஆச்சு? இண்ஸ்ட்ராவுல ஏன் இப்படி ஒரு பதிவு?

”எங்கம்மா மகேஷ்வரி brain hemorrhage பாதிப்பால் கடந்த 4 வருஷமா கோமா பேஷண்டாக இருக்காங்க. ஒருநாள் திடீரென்று மயங்கி விழுந்தாங்க. அதற்கு அப்புறம் கோமா நிலைக்கு போய்ட்டாங்க. நாங்களும் இங்கிருக்கும் டாக்டர்கள் வெளிநாட்டில் இருக்கும் நல்ல டாக்கர்களிடமெல்லாம் அம்மாவின் மெடிக்கல் விவரத்தை காட்டினோம். ஆனா அவங்க எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை... “சாரிங்க... அவங்க இப்படிதான் இருப்பாங்க.. ”ன்னாங்க.

இந்த இன்ஸ்டா பதிவை நான் போட்டது எதற்காக என்றால், உலகத்துல எங்கையோ ஒரு மூலையில் இருக்கும் மருத்துவர் யாரேனும் என் அம்மாவின் நிலைகண்டு அதற்கான சிகிச்சை அவங்ககிட்ட இருந்தா அவர் என்னை தொடர்புகொள்வார் என்ற நம்பிக்கையினால்தான் எழுதினேன். எனக்கு அப்பாவுக்கு, அண்ணனுக்கு மூணு பேருக்குமே, அம்மா மீண்டு வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு”

அம்மாவை கவனிச்சுக்கிறது அப்பான்னு சொல்லி இருக்கீங்களே?

ஆமா... அப்பா ஒரு சிங்கிள் பேரண்டாக இருந்து அம்மாவை நாலுவருஷமா கவனிச்சுட்டு வராரு. கடந்த 4 வருஷத்துக்கு முன்னாடி என் அப்பா, எங்களுக்கு சூப்பர் அப்பாவாக இருந்தாரு. இப்போ, அதையும் தாண்டி ஒரு சிறந்த அம்மாவாகவும் இருக்காரு. எங்க அம்மாவுக்கு ஒரு தோழனா மாறி எங்களை அவர் நல்லா பார்த்துக்கிறாரு.

அப்பாவுக்கு எப்படி இப்படி ஒரு திறமை ?

போன ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் அப்பாவோட அம்மா அதாவது என் பாட்டி இறந்து போனாங்க... எங்க பாட்டியும் சிங்கிள் பேரண்டாதான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினாங்க. அதனால அப்பாவுக்கு எப்படி எங்களைப் பார்த்துக்கொள்வதுன்னு நல்லாவே தெரியும். ஒரு சிங்கிள் மதரா, சிங்கிள்அப்பாவாஆ இருப்பது சாதாரண விஷயமில்ல... ஆகையால் சிங்கிள் பேரண்டுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக நான் மகிழ்மதி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நாங்கள் சிங்கிள் பேரண்டுக்கு உதவி செய்து வருகிறோம்.

மகிழ்மதி அமைப்பு
மகிழ்மதி அமைப்பு

அம்மாவின் இந்த நிலமை அப்பாவை ரொம்ப ஃபீல் பண்ணவச்சுதா?

ஆமா... கண்டிப்பா...அம்மா இப்படி படுத்த படுக்கையானபிறகு அப்பாதான் ரொம்ப ஃபீல் பண்ணினாரு... அவரு சினிமாவுல நடிச்ச சமயம் பல நாட்கள் வெளியூர்லதான் இருந்தாரு... அப்போ எல்லாம் அம்மாவ மிஸ் பண்ணியிருக்காரு அத நினைச்சு இப்போ ரொம்ப ஃபீல் பண்றாரு... சினிமாவுல ரேகா மேம், குஷ்பு மேம், இவங்க எல்லாம் அப்பாவுக்கு ரொம்ப ப்ரெண்ட் ங்கறத தாண்டி, அவங்க அம்மாவுக்கு நல்ல ப்ரெண்ட்ஸ். அம்மாவுக்குள்ளேயும் அப்பாவுக்குள்ளேயும், ஒரு சின்ன சண்டையோ சச்சரவோ வந்தது கிடையாது. அப்பா தன்னோட எல்லா வேலைகளுக்கும் அம்மாவ எதிர்பார்த்து இருந்தவரு... இப்போ அம்மா படுத்ததும் அப்பாவுக்கு ரொம்ப கவலையாயிடுச்சு...

உங்களுக்கு உங்க அப்பாவ ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்..

ரொம்ப பிடிக்கும். எல்லோரும் என்னை கேப்பாங்க உங்க அப்பா உனக்கு, ராஜா ராணி படத்துல வர்ர நயந்தாரா அப்பா மாதிரியான்னு. இல்லவே இல்ல... நான் அப்பாவிடம் என் நிலையைச்சொல்லி அழுதது கிடையாது. என்னைப்பொருத்தவரை எனக்கு எங்கப்பா என்னைவிட வயசுல சின்னவரு என்ற நினைப்புதான் வரும். எனக்கு பத்து வயசு இருக்கும் பொழுது அவருக்கு ரெண்டு வயசு... அப்படீன்னுதான் நினைப்பேன். ஒரு சின்ன பையன்கிட்ட போய், நாம அழமாட்டோம்ல... அந்த மாதிரிதான் எனக்கு. நான் அப்பா அம்மா முன்னாடி அழுதது இல்ல...

அப்பாவுக்கு நடிப்பை தவிர வேறு எதுவுமே தெரியாது. ஆனா அம்மா அப்படி கிடையாது அவங்க கிட்ட ஒரு ஆளுமை இருக்கும். அம்மா ஆங்கில படிப்புல கோல்ட் மெடலிஸ்ட். ரொம்ப ஹார்ட் ஒர்க் செய்வாங்க... அம்மாவோட friends எல்லாம், ஒர்க்கிங் உமன், அதுமாதிரி தானும் ஏதாவது பண்ணனும்னு நினைச்சு, தனி மனுஷியா ஒரு நாதாம்பாள் திரைப்பட தொழிற்சாலை ஆரம்மிச்ச போது அவங்களுக்கு வயசு 50. தன்னோட ப்ரொடக்‌ஷன் கம்பெனில, அம்மா 2 படங்கள் பண்ணினாங்க ரெண்டுமே இலாபத்தைக் கொடுத்தபடம். அவங்ககிட்ட பட்ஜட் கண்ட்ரோல் இருக்கும். அதனாலதான் ரெண்டு படங்களிலேயும் அவங்களால லாபம் பார்க்க முடிஞ்சது. மூணாவது படத்துக்கு கதை கேட்டு எல்லாம் முடிஞ்சு ஷூட் ஆரம்பிக்கலாம்னு இருந்த போதுதான் திடீர்ன்னு அவங்களுக்கு brain hemorrhage வந்துடுச்சு. சினிமாவைப்பொருத்தவரை மகேஸ்வரி சத்யராஜ் என்றாலே எல்லோருக்கும் தெரியும். நல்ல பேரு அவங்களுக்கு...

நீங்க dietician உணவு மற்றும் உடல் ஹெல்த் குறித்து உங்ககிட்ட ஒரு awareness இருக்கும்.. அப்புறம் எப்படி அம்மாவுக்கு இப்படி ஒரு நோய் வந்தது?

அம்மா அப்பா இருவருமே நல்ல ஹெல்த்தை மெயிண்டைன் பண்றவங்க... அம்மாவுக்கு மட்டும் எப்போதாவது மூட்டு வலி வரும் அவ்வளவுதான். மத்தப்படி அவங்களுக்கு எந்த வியாதியும் கிடையாது. சொல்லப்போனால் அவங்களுக்கு நீச்சல் தெரியும், தினமும் நீச்சல் பயிற்சிக்கு போவாங்க. ஆனா நீங்க கேக்குற மாதிரி இவங்களுக்குதான் இது வரணும்னு எதுவும் இல்லை. யாருக்கும் எப்பவேணும்னாலும் நோய் வரலாம். ஆனா ஹெல்த் மெயிண்டெயின் பண்ணினா, நோய் வர்றது குறையும். நோய் தானா வர்றது எப்படி? நாமா வரவழைச்சுப்பது எப்படி? வந்ததுக்கப்புறம் அதை போக்க சரியான மருந்தை தவறாம எடுத்துக்கணும்.

அலோபதியை தவிற மத்த மருந்துகளை ட்ரைப்பண்ணினீங்களா?

ஆயுர்வேதம், வர்மக்கலை ஹோமியோபதி ன்னு அத்தனை மருந்துகளும் கொடுத்துப்பார்த்துவிட்டோம் ஆனால் அம்மாக்கு இன்னமும் நினைவுத் திரும்பவில்லை.... அப்பா நெப்போலியன் சார்கிட்ட கூட பேசினாரு.. அவரோட பையன் தனுஷுக்கு Muscular dystrophy இருக்கு... அதன் மூலமா அவங்களுக்கு நல்ல டாக்டர் ஏதாவது தெரியுமான்னு கேட்டு கூட பார்த்துட்டாங்க... சொல்லப்போனா அவங்க குடும்பம் மெடிசன் விஷயத்துல ரொம்ப அறிவைக்கொண்டவங்க.. நா இந்த போஸ்ட் போட்டது கூட யாராவது இதை படிச்சு, எங்களுக்கு உதவி செய்யனும்னுதான்.

அப்பாவோட மனநிலை இப்போ எப்படி இருக்கு?

நீங்களெல்லாம் பாக்குற சத்யராஜ் வேற... வெளில அவரு எப்போதும் ஜோக் அடிச்சுட்டு சிரிச்சுட்டு இருப்பாரு. ஆனா அவரு அந்தமாதிரி கிடையது. குடும்பத்துல அக்கறை அதிகம். அம்மாவுக்கு இப்படி ஆனதும் எங்களை அவரு ரொம்ப பாதுகாப்பா வச்சுக்குறாரு. ஒரு இடத்துக்கு போய்ட்டு கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா... “எங்கே... ரொம்ப டிராப்பிக்கா, எப்ப வருவ...” அப்படீன்னு அக்கறையா கேட்பாரு. நான் என்னோட க்ளீனிக்ல இருந்தா, ”சாப்டியா, அப்படீன்னு அக்கரையா கேட்பாரு.. தினமும் குறஞ்சது 2 தடவையாவது என்னோட பேசிடுவாரு. பெண்களுக்கான அந்த நாட்கள்ல என் மேல கூடுதல் அக்கறை காட்டுவாரு. “உடம்பு சரியில்லைன்னா... ரெண்டு நாள் லீவு போட்டுடு... இந்த சமயத்துல புது பேஷண்ட் யாரையும் பார்க்கவேண்டாம்...” அப்படீன்னு அக்கறையா சொல்லுவாரு. அவரு ஐந்து தங்கச்சி கூட பிறந்தவரு. அதனால பெண்களைப்பத்தியும் அவங்க கஷ்டங்கள் சங்கடங்கள் பத்தியும் அவருக்கு நல்லா தெரியும். அதனால பெண்கள் மேல அவருக்கு ஒரு மரியாதையும் மதிப்பும் எப்போதும் உண்டு. அவர்,கூட ஒர்க் பண்ணிய பெண்கள் எல்லாருமே அவர்கிட்ட ரொம்ப ஃப்ரண்ட்லியா பேசுவாங்க. என்னோட ஃப்ரண்ட்ஸ் கூட எங்கப்பாவ சத்யாப்பான்னுதான் கூப்பிடுவாங்க. அவர்கூட எதப்பத்தி வேணாலும் பேசலாம். ஒரு வித்தியாசமே தெரியாது. ரொம்ப அன்பானவர்,

உங்க குடும்பத்துல மருத்துவர் நிறைய என்று கேள்விப்பட்டோம்...

எங்க குடும்பத்துல, அப்பாவின் அப்பா அதாவது என் தாத்தா ஒரு பெரிய டாக்டர், என்னோட அத்தையும் டாக்டர்தான், எங்களுக்கு ரிலேஷன் ஹெல்ப் ஏதும் கிடையாது. ஆனா நடிகர் சிவக்குமார் மாமா அப்பாவுக்கும் எங்க குடும்பத்துக்கும் ரொம்பவே ஹெல்ப் பண்ணியிருக்காங்க... அதேமாதிரி, அப்பாவேட ப்ரதர் முத்துமாமா அவரும் எங்களுக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணிட்டு இருக்காரு... இவங்க ரெண்டு பேரையும் தவிற, அப்பாவோட ப்ரெண்ட்ஸ் அடிக்கடி போன் பண்ணி கேட்பாங்க. என்னோட ப்ரெண்ட்ஸ் வாணி போஜன் ரித்விகா, சாய் ப்ரியங்கா ரூத் இவங்கெல்லாம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க...

மக்களிடத்தில் நீங்க சொல்ல நினைப்பது என்ன?

ஆரோக்கியம்தான். அதற்குதான் எல்லோரும் இம்பார்ட்டெண்ட்ஸ் கொடுக்கணும். பொருளாதார ரீதியா ஒருவர் வெற்றிபெறனும்னா ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். ஆரோக்கியத்தைத் தாண்டி உடல் உபாதை வந்தால், நம்பிக்கையுடன் அதை கையாளனும் என்னிக்காவது அந்த நோய் குணமாகும் என்ற நம்பிக்கை வேணும். ஒரு பத்து வருடத்துக்கு முன்னாடி டிபிக்கு மருந்து இல்ல, இப்ப இருக்கு, பெண்களுக்கான மார்பக புற்றுநோய்க்கு மருந்து இல்ல... இப்ப இருக்கு. அதே மாதிரி அம்மா கோமா ஸ்டேஜுக்கு போய் இருந்தாலும், அவர்களுடைய மத்த உறுப்புக்கள் நல்லா இருக்கு. அதனால என்னிக்காவது இந்த நோய்க்கான சரியான சிகிச்சைக்கிடைக்கும், அப்போ அம்மாவுக்கு நோய் சரியாகலாம் அந்த நாளுக்காக நாங்கள் காத்து இருக்கிறோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com