சட்டப்பேரவையில் ’தனி ஒருவன்’ டிடிவி!

சட்டப்பேரவையில் ’தனி ஒருவன்’ டிடிவி!
சட்டப்பேரவையில் ’தனி ஒருவன்’ டிடிவி!
Published on

தமிழக சட்டப்பேரவையில்  எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்த போது சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மட்டும் தனியே அவையில் அமர்ந்திருந்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆர்கே நகர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள டிடிவி தினகரனும் முதன்முறையாக எம்எல்ஏவாக சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க வந்திருந்தார். அவருக்கு 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவைக்கு வந்த தினகரனுக்கு திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர் இருந்த பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் தினகரன் அமர்ந்தார். பேரவை கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரையாற்றினார். அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் தினகரன் வெளிநடப்பு செய்யாமல் சட்டப்பேரவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்றார். அளுங்கட்சியினர் ஒருபுறம் அமர்ந்து இருக்க, டிடிவி தினகரன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com