ஐபிஎல் வரலாற்றில் அரைசதம் விளாசிய வயதான இந்திய வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் அரைசதம் விளாசிய வயதான இந்திய வீரர் யார் தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றில் அரைசதம் விளாசிய வயதான இந்திய வீரர் யார் தெரியுமா?
Published on

மும்பை வான்கடே மைதானட்டில் நடந்த ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அசத்தலான அரைசதம் அடித்ததன் மூலம் அதிக வயதில் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் தோனி இடம்பிடித்தார்.

ஐபிஎல் 2022 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான தொடக்க ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி அரைசதம் விளாசினார். கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு பங்கேற்ற முதல் போட்டியில், தோனி அதிரடியாக அரைசதம் விளாசினார்.

ஐபிஎல் வாழ்க்கையில் தனது 24வது அரைசதத்தை வெறும் 38 பந்துகளில் விளாசினார். 3 ஆண்டுகள் கழித்து தோனி அடித்துள்ள அரைசதம் இது. ஐபிஎல்லில் தோனியின் கடைசி அரை சதம் 2019 ஏப்ரல் 21 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி)க்கு எதிராக வந்தது.

வான்கடே மைதானத்தில் 40 வயது, 262 நாட்கள் நிறைவு செய்து ஐபிஎல்லில் அரை சதம் அடித்த வயதான இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். அவர் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் முதலிடம் பெற்றார்.

ஐபிஎல் அரைசதம் அடித்த வயதான இந்தியர்:
40 வருடம் 262 நாட்கள் - தோனி Vs KKR, 2022
40 வருடம் 116 நாட்கள் - ராகுல் டிராவிட் Vs DC, 2013
39 வருடம் 362 நாட்கள் - சச்சின் டெண்டுல்கர் Vs DC, 2013

அதிக வயதில் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ( வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து) தோனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

41 வருடம் 181 நாட்கள் - ஆடம் கில்கிறிஸ்ட் Vs RCB, 2013
41 வருடம் 39 நாட்கள் - கிறிஸ் கெய்ல் Vs RCB, 2020
40 வருடம் 262 நாட்கள் - எம்எஸ் தோனி Vs KKR, 2022
40 வருடம் 116 நாட்கள் - ராகுல் டிராவிட் Vs DC, 2013
39 வருடம் 362 நாட்கள் - சச்சின் டெண்டுல்கர் Vs DC, 2013

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com