தருமபுரி: கோழிப்பண்ணையால் ஈ தொல்லை; தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

தருமபுரி: கோழிப்பண்ணையால் ஈ தொல்லை; தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
தருமபுரி: கோழிப்பண்ணையால் ஈ தொல்லை; தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
Published on

அரூர் அருகே கோழிப் பண்ணையால் ஏழு கிராமங்களில் ஈக்கள் தொல்லை நிலவுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அக்கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வேடகட்டமடுவு ஊராட்சியில் உள்ள கருங்கல்பாடி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கடந்த 5 வருடத்திற்கு முன்பாக கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் சுமார் 5 லட்சம் கோழிகள் இருக்கும் நிலையில், தினசரி 300-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழக்கின்றன.

அப்படி உயிரிழக்கும் கோழிகளை தீ வைத்து எரிக்கப்படும்போது துர்நாற்றத்துடன் வரும் கரும்புகையால் ஆலம்பாடி, கருங்கல்பாடி, மூன்றம்பட்டி, புதூர் உள்பட ஏழு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுகின்றனர். மேலும் இந்த கோழிப்பண்ணையால், ஈக்கள் உற்பத்தியாகி குடங்கள், சமையல் பாத்திரங்கள், கால்நடைகளுக்கு வைக்கும் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈக்கள் பெருகியுள்ளதால், கிராம மக்கள் சாப்பிட முடியாமல் நீர் அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால், நோய் தொற்றுக்கு ஆளாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால் இந்த கோழிப்பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும் என கிராமமக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர், சப்-கலெக்டர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஏழு கிராமங்களுக்கு செல்லும் நுழைவு பகுதியிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கம்பம், வீடுகள், விவசாய நிலங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்பு கொடிகட்டி சுவர்களில் கட்சி சின்னங்கள் வரையப்பட்டிருப்பதை அழித்தும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால், வாக்குச்சாவடிக்கு செல்லக்கூடாது என முடிவெடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com